• Jul 25 2025

எங்க வீட்டுக்கு புதுசா இன்னொருவர் வரப்போறாங்க- மீண்டும் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கணேஷ் வெங்கட்ராமன்- நிஷா தம்பதியினர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

உன்னைப் போல் ஒருவன், அபியும் நானும், தனி ஒருவன், தொடரி போன்ற படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் கணேஷ் வெங்கட்ராமன் தமிழகத்தின் டாப் பிரபலமாக மாறினார்.

இவர் கனா காணும் காலங்கள், நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து வந்த நிஷாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முதல் ஒரு பெணட் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு  சமைரா எனப் பெயர் வைத்துள்ளதையும் சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்திருந்தனர்.


சோஷியில் மீடியாக்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்கள் தமது குழந்தையுடன் அடிக்கடி போட்டோ ஷீட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது ஒரு குட்நியூஸ் சொல்லி இருக்கின்றார்கள். அதாவது நிஷா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளாராம் என அறிவித்துள்ளனர்.இதனால் இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதையும் காணலாம். 

Advertisement

Advertisement