• Jul 24 2025

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் மற்றுமொரு பிரபல சீரியல்- அடடே இந்த ஹிட் சீரியலும் முடிகின்றதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்  புதிதாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் திடீரென்று இப்போது மூன்று சீரியல்கள் மொத்தமாக முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் சீரியல்கள் முடிவுக்கு வருவது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

பொதுவாக சேனல்களுக்குள் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையிலேயே எந்த சேனல் முன்னணி இடத்தில் இருக்கிறது என்று தீர்மானிக்கப்படுகிறது. அதற்காகவே பல ரியாலிட்டி ஷோக்களும், சீரியல்களையும் போட்டி போட்டு பல சேனல்கள் ஒளிபரப்பாக்கி வருகின்றனர். முன்னணியில் இருக்கும் பல நடிகர்களையும் தங்களுடைய சீரியல்களில் நடிக்க வைத்து வருகிறார்கள்.


அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்து விட்டது. இதன் கிளைமாக்ஸ் சூட்டிங் கூட அண்மையில் நடைபெற்றது.  குடும்பங்கள் கொண்டாடும் தொடராக இருக்கும் இந்த தொடர் முடிவுக்கு வருவதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடர் எல்லாம் இப்போது டாப்பில் இருக்கிறது. இந்த நிலையில் தற்பொழுது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் விரைவில் முடிவடைய இருக்கிறதாம், இந்த செய்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் தகவலாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement