• Jul 25 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்பில் தீயாய் பரவும் மற்றொரு வதந்தி!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. 

இதனையடுத்து சீசன் 2 குறித்த செய்திகள் கசியவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், சீசன் 2 விற்கான புரோமோ அண்மையில் வெளியாகி உள்ளது. ஆனால்இ இதில் ஸ்டாலின் முத்துவை தவிர அனைவரும் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளனர். 

குறிப்பாக சுஜிதா, குமரன் தங்கராஜன் போன்ற மக்களுக்கு மிகவும் பேவரைட்டான நடிகர்கள் யாரும் இந்த சீசனில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் மீனா ரோலில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் சீசனிலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என சமீபத்தில் தகவல் பரவியது. 

எனினும், அதுபற்றி விளக்கமளித்த ஹேமா, 'எதுவும் உறுதியாகவில்லை, நடந்தால் நானே அறிவிக்கிறேன்' என  கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement