• Jul 24 2025

தமிழ் சினிமாவில் மற்றுமோர் அதிர்ச்சி மரணம்... முக்கிய பிரபலம் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் மனோபாலாவின் மரணம் நம் மனதை விட்டு அகலாத இந்த நேரத்தில் மற்றுமோர் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது. அதாவது 54 வயதாகும் பிரபல நடன இயக்குநர் சம்பத்ராஜ் திடீர் என மரணமடைந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அந்தவகையில் இவர் தமிழ், தெலுங்கு, போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதாவது 'சரிகமபதநி, சின்ன ஜமீன், மதுமதி, அமராவதி, காதல் கோட்டை, வான்மதி, நம்மஅண்ணாச்சி, என் சுவாச காற்று, ஹானஸ்ட் ராஜ், ஊட்ட, அதர்மம்' உள்ளிட்ட பல படங்களை கூற முடியும்.

இவருக்கு ஏற்கனவே ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனையில் நடன இயக்குநர் சம்பத்ராஜ் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து சிறுநீரக பிரச்சனை சம்மந்தமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு இவர் உயிரிழந்தார்.


இறந்த இவரின் இவரின் உடல் இறுதி அஞ்சலிக்காக தற்போது வளசரவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இன்று 4 மணி அளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் இறப்பிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement