• Jul 24 2025

அடம்பிடிக்கும் ரேணுகா... ஜான்சிராணியை வீட்டை விட்டுத் துரத்தும் ஜனனி... விறுவிறுப்பின் உச்சத்தில் வெளிவந்த 'எதிர்நீச்சல்' ப்ரோமோ.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் குணசேகரன் ரேணுகாவிடம் "உன் பொண்ணுகிட்ட ஒழுங்காக அதை எடுத்துச் சொல்லி சடங்கு சுத்துற வழியைப் பாருங்கம்மா" எனக் கூறுகின்றார். பதிவிற்கு ரேணுகா "எவன் சொன்னாலும் நான் என் பிள்ளைக்கு சடங்கு சுத்த மாட்டேன்" என்கிறார். 


மறுபுறம் ரேணுகாவிடம் ஜான்சிராணி " அடக்கவொடுக்கமாக என் வீட்டிற்கு வந்தப்போவே தெரியும் பிளான் போடுறீங்க என்று" எனக் கூறுகின்றார். பதிலிற்கு ஜனனி "இப்பிடி அநாகரிகமாக பேசுறதை நிப்பாடுங்க, முதலில் வெளிய போங்க" என ஜான்சிராணியிடம் கூறுகின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement