• Jul 25 2025

சுந்தரி கார்த்திக்கிடம் பேசுவதை ஸ்பீக்கரில் கேட்ட அனு- அடம்பிடித்த அப்பத்தா- இனி நடக்கப்போவது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலில் தற்பொழுது முருகனுக்கு உண்மை தெரிந்ததால் அவர் கார்த்திக்கை குத்தியே ஆவேன் என்று கத்தியை எடுத்துக் கொண்டு போகின்றார். அந்தக் கத்தித் குத்து சுந்தரி மீது விழுந்து விடுகின்றது.

இதனால் முருகன் கடும் அதிர்ச்சியில் இருந்தார். தற்பொழுது சுந்தரி அதிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டார். கார்த்திக்கிற்கு பதிலடி கொடுத்தே ஆகனும் என்று முருகன் கடும் கோபத்தில் இருக்கின்றார்.


இப்படியான நிலையில் அப்பத்தா கார்த்திக்கை வீட்டிற்கு வரச்சொல்லுமாறு சுந்தரியிடம் சொல்கின்றார். இப்போது சுந்தரி அவர் வரமாட்டார் என்று சொல்ல அப்பத்தா கார்த்திக் இப்போ வந்தே ஆகனும் போன் போடு என்கிறார்.

அப்போது சுந்தரி கார்த்திக்கிற்கு போன் பண்ணும் போது கார்த்திக் அனு பக்கத்தில் இருக்கின்றார். இதனால் அனு சுந்தரி எதுக்கு உனகக கோஃல் பண்ணுறா அஃட்டன் பண்ணி ஸ்பீக்கரில் போடு என்று சொல்ல கார்த்திக்கும் ஸ்பீக்கரில் போடுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement