• Jul 26 2025

தன்னை விட வயதில் சிறியவரை காதலிக்கும் அனுஷ்கா.. வெளியானது 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி' படத்தின் டீசர் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பி.மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர்'. இப்படத்தில் நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தை யுவி கிரியேசன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 


அத்தோடு ராதன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். மேலும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்பு யாவும் முடிவடைந்து வெளியாகும் நிலையில் உள்ளது.

அந்தவகையில் இப்படத்தில் தன்னைவிட வயதில் சிறியவரை காதலிக்கும் படியான சர்ச்சைக்குரிய வேடத்தில் தான் நடித்திருக்கிறார் அனுஷ்கா. இந்நிலையில், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அனுஷ்காவின் அம்மா கேரக்டர், இந்த ஜென்மத்துல அவ கல்யாணம் பண்ணிக்க போவதில்லை என டயலாக் சொல்கிறார். 


இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது 40 வயதாகியுள்ள அனுஷ்கா, இனி திருமணம் செய்யப்போவதில்லை, போய் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோடா என்று கூறுவதன் மூலம் சூசகமாக அறிவித்துள்ளார் எனக் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது இப்படம் மீண்டும் சினிமாவில் அனுஷாகாவிற்கு நல்ல கம்பேக் படமாகவும் அமையும் எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement