• Jul 24 2025

15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லையேல் மானநஷ்ட ஈடாக 10 கோடி தரவேண்டும் ! _ இசையமைப்பாளர் ரஹ்மான்.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மிக பிரபலமானவர். இவரின் இசையமைப்பில் மயங்கிடாத ரசிகர்களே இல்லை. இவர் இசையமைத்த பாடல்களுக்கு தனி  ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இந்நிலையில் தான் இவர் மீது ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.


2018இல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்காக விழா நடந்த 29.50 லட்சம் முற்பணம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு  கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் நடத்திய இசை கச்சேரிக்கு சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என சர்ச்சை ஏற்பட்டிருந்தது.


குறித்த இசை நிகழ்ச்சிக்கு  அரசு அனுமதி அளிக்காததால் நிகழ்ச்சி ரத்தானது. ஆனால் ரஹ்மான் வாங்கிய முற் பணத்தை திரும்ப தரவில்லை ஏன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகி சென்னை போலீஸ் ஆணையரகத்தில் புகார்அளித்திருக்கின்றார்.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் எதிர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். நிகழ்ச்சி ரத்தானால் முற்பணம் திரும்ப தரப்பட மாட்டாது என ஒப்பந்தத்திலேயே இருந்தது. ஆனால் எனது  நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இப்படி ஒரு புகார் அளிக்கப்பட்டு இருப்பதற்கு 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் மானநஷ்ட ஈடாக 10 கோடி தரவேண்டும் என கேட்டிருக்கிறார் ரஹ்மான். 

Advertisement

Advertisement