• Jul 26 2025

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி.. அதுவும் சென்னையிலா..? கிடைக்கிற பணத்தை என்ன செய்யப் போறார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

1992இல் வெளியான 'ரோஜா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏஆர் ரஹ்மான், அன்று முதல் இன்றுவரை சுமார் 30 ஆண்டுகளாக முன்னணி இசைப் புயலாக சுழன்றடித்து வருகின்றார். இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல், சமீபகாலமாக வெளிநாடுகளில் பல இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகின்றார்.


இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த ஏஆர் ரஹ்மானிடம், "சார், சென்னை என்றொரு நகரம் இருக்கிறது நினைவிருக்கிறதா?" என ரசிகர் ஒருவர் கமெண்ட் மூலம் கேட்டிருந்தார். அதாவது சென்னையில் எப்போது இசை நிகழ்ச்சி என அந்த ரசிகர் ரஹ்மானிடம் கேட்பதாக அந்தக் கேள்வி அமைந்து இருந்தது.


அந்த ரசிகரின் கமெண்டுக்கு பதிலளித்த ஏஆர் ரஹ்மான், சென்னையில் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்க 6 மாதங்கள் ஆகிறது என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது இது தொடர்பான பஞ்சாயத்து எல்லாம் முடிந்து ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அந்தவகையில் மார்ச் 19-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. முக்கியமாக இந்த இசை நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதியானது, திரைப்பட படப்பிடிப்புகளின் போது உயிரிழந்த லைட் மேன்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement