• Jul 26 2025

அதிர்ச்சி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. மயிரிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் மகன்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இசைப்புயல் என ரசிகர்களால் சிறப்பாக அழைக்கப்பட்டு வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் இசைக்கு மயங்காத ரசிகர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு இசையாலே பலரது மனதை வசீகரித்து இருக்கின்றார். 

இவரைப் போலவே இவரின் மகன் ஏ.ஆர்.அமீனும் தற்போது பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் சொந்தமாக பாடல்கள் கம்போஸ் செய்து அதனை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றார்.


இந்நிலையில் தற்போது ஒரு பாடல் ஷூட்டிங்கில் அமீன் பங்கேற்று இருந்தபோது, அங்கு ஒரு பெரிய விபத்து திடீரென ஏற்பட்டு இருக்கிறது. அதில் இருந்து ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீனும் மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்.

அதாவது கிரேனில் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த அலங்கார விளக்குகள் திடீரென அறுந்து கீழே விழுந்திருக்கிறது. இதுகுறித்து அமீன் வெளியிட்டுள்ள பதிவில் "நான் நடுவில் தான் நின்று இருந்தேன். சில நொடிகள் முன் அல்லது பின்னர் அது விழுந்திருந்தால் எங்கள் தலையில் தான் விழுந்து இருக்கும்.  மொத்த டீமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை" என குறிப்பிட்டு இருக்கிறார்.


இவரின் இந்தப் பதிவினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காயுள்ளனர். ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முதல் தான் பாடகர் பென்னி தயாள் கலந்து கொண்டிருந்த நிகழ்ச்சி ஒன்றிலும் பறந்து கொண்டிருந்த ​​​​ட்ரோன் கேமரா யாருமே எதிர்பாராத நேரத்தில் திடீரென அவரது தலையின் பின்புறத்தில் வந்து பலமாக மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமீனும் இப்படியான ஒரு விபத்தில் சிக்க இருந்தமை ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இருப்பினும் எந்த ஒரு ஆபத்தும் நிகழவில்லை எனக் கூறி ரசிகர்கள் பலரும் அமீனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement