நடிகர் சுந்தர். சி இயக்கத்தில் அரண்மை பாகம் 1, 2, 3 என அடுத்து அடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அரண்மை பாகம் 4 தயாராகி வரும் நிலையில் தற்போது ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு கிடைத்துள்ளது.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னாமற்றும் ராஷி கண்ணா போன்றோர் நடிக்கின்ற தகவல் ஏற்கனவே கிடைத்திருந்தது. மேலும் இப்படத்திடற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார்.
அரண்மனை 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ரிலீஸ் தொடர்பான பிரமாண்ட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு பெண்ணின் பின்புறம், ஒரு பெரிய பையனும் , பெண்ணும் கைகளைப் பிடித்தபடி, பெரிய கைவிடப்பட்ட மாளிகையில், இரண்டு பேய்த்தனமான கண்களுடன் இருப்பதுபோலவும், மேலும் 2024 பொங்கல் முன்னிட்டு திரைக்கு வரும் என்ற அறிவிப்போடும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
Listen News!