• Jul 26 2025

மகளின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்த அறந்தாங்கி நிஷா- அடடே இது தான் காரணமா?- கியூட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பல ரியாலிட்ரி ஷோக்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமாகி இருக்கின்றன. அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகிய சூப்பர் ஹிட் நிகழ்ச்சி தான் கலக்கப் போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் அறந்தாங்கி நிஷா.


ஸ்ராண்டப் காமெடியனாக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து கே.பி.ஒய் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கினார்.இதன்பின் தொகுப்பாளினியான இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி 1, உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.


சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்.மாரி 2, கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம், ட்ரிக்கர் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிஷா அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார்.


இந்நிலையில் இன்று தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தன் மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அடடே அதுக்குள்ளே நிஷாவின் மகள் வளர்ந்து விட்டாரா எனக் கூறி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement