• Jul 25 2025

ஆர்வமாக Unboxing செய்யும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்...அப்படி என்னதான் இருந்துச்சு தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது  தீயாய் பரவி வருகிறது.

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் AR ரஹ்மான். தமிழ், இந்தி சினிமாவில் பல படங்களின் வெற்றிக்கு AR ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. 



தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன  ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளன.அத்தோடு  ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் ரஹ்மான் பெற்று உலக இசை ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர்.

அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய முக்கிய படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது.அத்தோடு  இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரியளவில் ரசிகர்களை கவர்ந்தன.



எனினும் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் கமல்ஹாசன் 234, லால் சலாம் ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரஹ்மான் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் முன்னர் ஒரு பார்சல் இருக்க, அதனை ஆர்வத்துடன் Unboxing செய்கிறார் ரஹ்மான். பின்னர் உள்ளே இருந்த மேக் புக்கை புன்னகையுடன் அவர் காட்டுகிறார். இந்த வீடியோ அவரது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement