• Jul 23 2025

டாடா படத்தில் கவினின் மகனாக நடித்த சிறுவனும் லியோ படத்தில் நடித்து வரும் சிறுமியும் இரட்டை சகோதரர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் டாடா. இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்றுவருகின்றன. பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்துவருகின்றனர்.

இந்தப் படம் கல்லூரி மாணவன் குழந்தைக்கு அப்பாவாக நேர்கிறது என்ற சுவாரசிய ஒன்லைனை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் கவினின் மகனாக நடித்திருந்தது பிரபல நடிகர் அர்ஜுனனின் மகன் இலன் என்ற தகவல் வெளியானது. இதனை அர்ஜுனனும் உறுதி செய்திருக்கிறார்.


அத்தோடு இப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்குள்  6 கோடிகளுக்கு மேல் வசூல் வந்திருக்கும் என கூறப்படுகிறது.கண்டிப்பாக கவினுக்கு இது மிகப்பெரும் வெற்றி மற்றும் அவரின் திரைப்பயணத்தின் நல்ல ஆரம்பம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இது மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் லியோ படத்தில் அர்ஜுனனின் மகள் இயல் நடித்துவருகிறார். இதனை அர்ஜுனன் ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் அர்ஜுனனின் மகன் இலன், மகள் இயல் இருவரும் டிவின்ஸ் . 'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களில் காமெடி வேடங்களில் கலக்கியவர் அர்ஜுனன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement