• Jul 23 2025

பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இரண்டு வீடுகளும் இவை தானா?- இந்த முறை களைகட்டப்போகுது

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. முதல் சீசனிலிருந்தே இந்நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தில்தான் இருக்கும். வீட்டுக்குள் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள், வாக்குவாதங்கள் என அனைத்தும் வேறு லெவலில் இருக்கும். 

ஏற்கனவே அறிமுகம் ஆனவர்களுடனும், அறிமுகம் ஆகாதவர்களுடனும் நூறு நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பது பெரிய டாஸ்க் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்தியிருக்கிறது.


பிக்பாஸ் ஏழாவது சீசனில் நடிகர் அப்பாஸ், பப்லு, சந்தோஷ் பிரதாப் கோவையில் பேருந்து ஓட்டிய ஷர்மிளா, நடிகை அம்மு அபிராமி, தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்‌ஷன், ஜாக்குலின், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், மாடல்கள் ரவிக்குமார், நிலா, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை சோனியா அகர்வால், விஜே பார்வதி உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

மேலும் இந்த முறை யாரும் எதிர்பாராத டுவிஸ்டுகள் அதிகம் நிகழவுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடு இருப்பதோடு பிக்பாஸாக பெண் ஒருவரும் குரல் கொடுக்கவுள்ளாராம். இப்படியான நிலையில் பிக்பாஸ் இரண்டு வீடுகளும் இப்படி் தான் இருககும் என்று ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement