• Sep 10 2025

எல்லோரும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறீங்களா?- விடாமுயற்சி திரைப்படம் குறித்து இயக்குநர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு இறுதியாக துணிவு திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து விடாமுயற்சி என்னும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக அவரது பிறந்தநாளில் அப்டேட் வெளியாகியிருந்தது.

முதலில் இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் விவன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.இருப்பினும் அந்தக் கதை அஜித்திற்கு பிடிக்காததால் அந்த வாய்ப்பு இயக்குநர் மகிழ்திருமேனியிடம் சென்றது.அதன் பின்பு இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அமலாக்கத்துறையினரால் அவர்களது அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் லைக்காவால் விடாமுயற்சி படத்தை தயாரிக்க முடியாத சூழல் நிலவியது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர் அஜித், தனது பைக்கை எடுத்துக்கொண்டு உலகம் சுற்ற கிளம்பிவிட்டார். இப்படி எந்த பக்கம் திரும்பினாலும், பெரிய பிரச்சனைகள் விடாமுயற்சி படத்தை சுற்றி நிலவி வந்த நிலையில், ஒருகட்டத்தில் இப்படம் கைவிடப்பட போவதாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது  இயக்குநர் மகிழ்திருமேனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது  அஜித் பைக்குடன் நிற்கும் படமும், அதனுடன் செப்டம்பர் என்ற கேப்ஷனும் போட்டு இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்கும் பதிவிட்டுள்ளார்.இதனால் அஜித் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.

Advertisement

Advertisement