• Jul 24 2025

நீங்கள் இரண்டு பேரும் லவ்வரா? கேள்வியெழுப்பிய விசித்திரா! அதற்கு ரவீனா என்ன சொல்லியிருக்கிறாங்க தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சில தினங்களுக்கு முன்பு ஜோவிகா படிப்பு விடயமாக விசித்ரா கேள்வி எழுப்பி கடும் சர்ச்சையில் மூழ்கினார். தற்போது இன்னுமொரு சர்ச்சைக்கு முகம் கொடுத்திருக்கிறார் விசித்திரா.


தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் ரவீனா மணி சந்திரா ஏற்கனவே வெளியில் நெருக்கமாக எடுத்திருந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தது. இவர்கள் இருவரும் காதலர்கள் என்று வெளியே ரசிகர்களும் கூறி வந்த நிலையில், ரவீனாவின் அம்மாவும் பேட்டி ஒன்றில் மணியும் ரவீனாவும் நல்ல நண்பர்கள் என கூறியிருந்தார் இந்நிலையில்  விசித்ரா இந்த கேள்வியை அவர்களிடையே நேரடியாக கேட்டுள்ளார்.


ரவீனா உள்ளே வந்ததும் மனி சந்திராவைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நீயுமா இந்த போட்டியில் என்று கேட்டார்... பின்பு முதல் நாள் வேக்கப் பாடலில் மணி சந்திரா நடனமாடிய போது ரவீனா திடீரென அவரது இடுப்பில் ஏறி அமர்ந்தார். பின்பு இடைக்கிடையே அவர்கள்  நெருக்கமாக பேசுவதையும் காணமுடிந்தது.


இந்நிலையில் நேற்றை தினம் ரவீனாவுக்கு பிறந்தநாள் கேக் வெட்டிய போதும் இருவரும் ஒரே நிற ஆடையினையும் அணிந்திருந்தார்கள். இவர்களின் நெருக்கம் தற்போது விசித்ராவை கேள்வி எழுப்ப வைத்துள்ளது. இந்நிலையில் இருவரும் அமர்ந்திருக்கும் போது நீங்கள் இரண்டு பேரும் லவ்வரா என்று விசித்ரா ஓப்பன் ஆகவே கேட்டுள்ளார். அதற்கு ரவீனா இல்லை நாங்கள் நண்பர்கள் என்று மழுப்பலாக பதிலளித்தார் விசித்திரா விடுவதாய் இல்லை மீண்டும் ரவீனாவிடம் , உங்களது நெருக்கம் காதலர்கள் போன்று தெரிகிறது என சொல்லியிருக்கிறார் இதற்கு இருவருமே இல்லை நாங்கள் நண்பர்கள் தான் கொஞ்சம் நெருக்கமான நண்பர்கள் என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளனர்.

Advertisement

Advertisement