• Jul 25 2025

லியோ படத்தில் கிளைமாக்ஸ் வரை இருக்கிறீங்களா?- த்ரிஷா கொடுத்த பதில்- ஆமாம்ல அவரைத் தான் கேட்கணும்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சேனலினால் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் விருது வழங்கும் நிகழ்வு கட்ந்த 2023, ஏப்ரல் 1-ஆம் தேதி சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பல்லாயிரம் பார்வையாளர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் ராங்கி திரைப்படங்களில் நடித்தமைக்கான இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதை நடிகை த்ரிஷா வழங்கப்பெற்றார். இந்த விருதை த்ரிஷாவுக்கு முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்பித்தார். இதற்காக நன்றி சொன்ன த்ரிஷா, குந்தவை தமக்கு ஸ்பெஷலனா கேரக்டர் என்றும் தெரிவித்தார்.


அத்துடன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துவரும் த்ரிஷாவிடம், “இந்த படத்தில் கிளைமாக்ஸ் வரை இருப்பீர்களா?” என தொகுப்பாளர்கள் பாலா, மணிமேகலை கேட்க, “இயக்குநரிடமே கேளுங்க.. அவரும் இங்தான் இருக்காரு” என கலகலப்பாக பேசினார்.


பிறகு ரசிகர்களை நோக்கி மாஸாக வெற்றிநடைபோட்டார். அவரை பார்த்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement