• Jul 24 2025

கோதையின் கம்பெனி பெயரை மாற்றிய அர்ஜுன்- வீட்டில் நடப்பதைப் பார்த்து திகைத்து போய் நின்ற ராகினி- Thamizhum Saraswathiyum

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் .அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

கோதை சமைப்பதற்காக சரஸ்வதி காய்கறிகளை வெட்டிக் கொடுக்கின்றார்.அப்போது நடேசன் உங்க அத்தை நிறைய நாளுக்கு அப்பிறம் சமைக்கிறாங்க,சமைக்கட்டுமே என்கின்றார். இந்த நேரம் அங்கு வரும் தமிழ் சரஸ்வதியை வரச் சொல்லி தன்னுடன் கூட்டிக் கொண்டு போகின்றார்.


பின்னர் சரஸ்வதியை மெக்கானிக் செட்டில் கொண்டு போய் விடுகின்றார்.மேலும் அம்மா சிரிச்சு சந்தோசமாக இருந்தால் தானே குழந்தையும் சந்தோசமாக இருக்கும். அதனால தான் உனக்கு பிடிச்ச இடத்திற்கு கூட்டிட்டு வந்தேன் என்கின்றார்.அத்தோடு சரஸ்வதிக்கு மாங்காய் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கின்றார்.

தொடர்ந்து அர்ஜுன் வீட்டில் அவருடைய அப்பாவுக்கும் அக்காவுக்கும் நினைவு நாள் என்பதனால் போட்டோ வைத்து பூஜை செய்கின்றனர். இதில் ராகினியும் கலந்து கொண்டு கவலைப்படுகின்றார். இதைப் பார்த்த அர்ஜுனின் அம்மா தன்னுடைய கணவரை ஏமாற்றி சொத்தெல்லாம் வாங்கிட்டாங்களே என பழைய கதையெல்லாம் புலம்பி ராகினிக்கு ஐஸ்வைக்கின்றார்.


அப்போது அர்ஜுனின் அக்கா கம்பெனியின் பெயரை மாற்றனும். லக்ஷ்மி இன்டர்ஸ்ரி என்பது தானே எங்க கம்பெனி, கோதை கம்பெனி என்று இருந்தால் அது எப்பிடி அதன் பெயரை மாற்றலாமே என்று சொல்ல முதலில் மறுப்புத் தெரிவித்த ராகினி பின்னர் பெயரை மாற்ற ஓகே சொல்கின்றார்.


தொடர்ந்து கோதை குடும்பத்தினர் அனைவரின் போட்டோக்களையும் வீட்டிலிருந்து கழட்ட சொல்லி அர்ஜுனின் அம்மா சொல்ல அர்ஜுனும் நீ அவங்க போட்டோக்களைப் பார்த்து கவலைப்படுற அதை கழட்டிடுவோம். இந்த மாதிரியான டைம்ல உன்னோட சந்தோசம் தான் முக்கியம் என போட்டோக்களை கழட்டுகின்றார். இதைப் பார்த்த ராகினி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement