• Jul 25 2025

கவினை அறைந்த காவியா... மணமேடையை விட்டு வெளியேறிய சக்தி... வேறொரு பெண் கழுத்தில் தாலி கட்டிய அர்ஜுன்.. 'Eeramaana Rojaave' ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சக்தியை, அர்ஜுனிற்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்காக ப்ரியாவும், காவியாவும் மணமேடையில் இருந்து அழைத்து செல்கின்றனர். 


உடனே கவின் வந்து அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றார். பதிலுக்கு கவினின் கன்னத்தில் பளார் என்று அறைந்த காவியா "ஒரு பொண்ணு உன்னைப் பிடிக்கல என்கிறாள் அவளை விரட்டி கல்யாணம் பண்ணிக்க பார்க்கிறியா" எனத் திட்டி விட்டு சக்தியை அழைத்து செல்கின்றார்.


ஆனால் துரதிஷ்டவஸமாக அர்ஜுன் வேறொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிவிடுகின்றார். இதனைப் பார்த்த சக்தி அர்ஜுன் எனக் கத்தி அழுகின்றார். ப்ரியாவும் காவியாவும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement