• Jul 25 2025

எல்லோர் முன்னாடியும் நடேசனை அவமானப்படுத்திய அர்ஜுன்- கண்கலங்கி நின்ற கோதை- சந்தோசத்தில் சரஸ்வதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் வெற்றி பெற்றதற்கு அவருடைய தன்னம்பிக்கை தான் காரணம் என்று சரஸ்வதி பாராட்ட தமிழ் அப்படி எல்லாம் இல்ல நமச்சியும் நீயும் இல்லாமல் என்னால எதுவும் செய்திருக்க முடியாது. நீங்க இரண்டு பேரும் இருந்தால் என்னால என்ன வேணும் என்றாலும் பண்ண முடியும் என்று சொல்கின்றார்.


தொடர்ந்து சரஸ்வதி வேலை செய்வதற்காக தனது கடைக்கு போகின்றார். அங்கே அவருடைய முதலாளி எனக்கு இரண்டு கடை வைச்சிட்டு வேலை பார்க்க்கிறது கஷ்டமாக இருக்கு அதனால இந்த கடையை விற்கலாம் என்று பார்க்கிறேன் என்று சொல்கின்றார். அத்தோடு உனக்கும் நல்லா வேலை தெரியும் பேசாமல் நீயே இந்த கடையை வாங்கிடம்மா என்று சொல்ல சரஸ்வதி சந்தோஷப்படுகின்றார்.

இதனைத் தொடர்ந்து அர்ஜுன் தன்னுடைய கம்பனிக்கு போவதற்காக வரும் போது கம்பனி வாசலில் தமிழ் நின்று கொண்டு நீ எதுக்கு இங்க வந்த உனக்கு வெட்கம் , ரோசம் மானம் ஏதும் இல்லையா? எலெக்ஷனில நான் தானே ஜெயிச்சேன் . அப்புறம் நீ எப்படி இந்த கம்பெனிக்கு வரலாம் என்று சொல்ல அர்ஜுன் இந்த பதவியை உன்னால சமாளிக்க முடியாது நீ தனியாளு என்று சொல்ல தமிழ் அது எங்களுக்க தெரியும் நீ மூடிட்டு பே என்று அனுப்பி வைக்கின்றார்.


பின்னர் வீட்டுக்கு வரும் அர்ஜு் நடேசன் செய்த வேலைக்காக திட்ட எல்லோரும் அர்ஜுனைத் திட்டுகின்றனர். அப்போது அர்ஜுன் நடேசன் பேசிய வீடியோவைக் காட்ட எல்லோரும் அதிர்ச்சியடைந்து நடேசனைத் திட்டுகின்றனர். அப்போது அர்ஜுன் மாமா அத்தை தோற்கனும் எனு் தான் இதைப் பண்ணினாரு என்று ஏத்தி விடுகின்றார். இதனால் கோதை அதிர்ச்சியடைந்து கண்கலங்கி நிற்கின்றார். இத்துடன் இன்றையஎப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement