• Jul 24 2025

நீச்சல் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த அர்ஜுனின் இளைய மகள்!- இவங்களும் ஹீரோயின் ஆகப் போறாங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருபவர் தான் அர்ஜுன்.30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நிலைத்து நிற்கும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இவருக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவை சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தார்.பட்டத்து யானை மற்றும் சொல்லிவிடவா ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா. 2 படங்களுமே கைகொடுக்காததால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.


அதேபோல் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கு சினிமாவின் மீது சுத்தமாக ஆர்வமில்லையாம். இதனால் தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆர்வத்தோடு இருந்த அஞ்சனா, கடந்தாண்டு ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.


அஞ்சனா தொடங்கியுள்ள ஹேண்ட் பேக் நிறுவனத்தில் என்ன ஸ்பெஷல் என்றால், அந்நிறுவனம் தயாரிக்கும் ஹேண்ட் பேக்குகள் அனைத்தும் மிருகங்களின் தோள் எதுவும் பயன்படுத்தாமல், பழங்களின் தோள்களை வைத்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

உலகிலேயே முதன்முறையாக அஞ்சனா தான் இந்த பிசினஸை வெற்றிகரமாக நடத்தி வருகிறாராம். இப்படி பிசினஸில் பிசியாக இருக்கும் அஞ்சனா, தனது கம்பெனி ஹேண்ட் பேக்குகளை புரமோட் செய்யும் மாடலாகவும் திகழ்ந்து வருகிறார். அந்த ஹேண்ட் பேக்குகளுடன் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அஞ்சனா.


அந்த வகையில், தற்போது நீச்சல் உடை அணிந்து ஆற்றில் நின்றபடி போஸ் கொடுத்துள்ள அஞ்சனாவின் செம்ம ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஒருவேளை இவரும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க போகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.





Advertisement

Advertisement