• Jul 25 2025

துன்பத்தை அனுபவிக்க நான் ரெடி தளபதி விஜய் ஸ்டைலில் வித்தியாசமான லுக்கில் போட்டோ வெளியிட்ட அர்னவ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் நடித்து பிரபல்யமானவர் தான் அர்னவ். இந்த சீரியலில் இவர் சித்து என்ற ரோலில் நடித்து வருகின்றார்.இவருக்கு ஜோடியாக அன்ஷிதா செல்லம்மா என்ற ரோலில் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நெருக்கமாகப் பழகுவதாகவும் இதனால் அர்னவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக இவருடைய மனைவியும் சீரியல் நடிகையுமான திவ்யா அண்மையில் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் பெயரில் அர்னவ் கைது செய்யப்பட்டிருந்தார்.


 நீதிமன்ற உத்தரவின் படி அர்னவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. அவருக்கு முன் ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்றும் சொல்லப்பட்டது. இதனால் செல்லம்மா சீரியலில் அவருக்கு பதில் வேறொருவர் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இந்நிலையில் கடந்த வாரம் அர்னாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து நேற்றைய தினம் அர்னாவ் மீண்டும் செல்லம்மா சீரியலில் நடிக்க ஆரம்பித்து விட்டார். “காதலோடு வாழும் வாழ்க்கை ஒருபோதும் சலிக்காது” என கேப்ஷன் கொடுத்து  கம்பேக் டூ சீரியல் என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.


இந்த நிலையில் தற்பொழுதும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஒருவரை சிரிக்க வைப்பதற்கும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சீரற்ற கருணைச் செயல்களை அனுபவிப்பதற்கும் எப்போதும் வாய்ப்புகள் உள்ளன.என்றும் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement