• Jul 25 2025

ஏ.ஆர்.ரஹ்மான் மகள்கள் வாங்கிய சொகுசு கார் மட்டும் இத்தனை கோடியா-சொக்கிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் மட்டுமில்லாமல், இசை அமைப்பாளராக சர்வதேச அரங்கிலும் அதிக கவனம் ஈர்த்து வருபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியாகி இருந்த 'ரோஜா' திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தான்  ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், அதன் பின்னர்  தொட்டது எல்லாம் தூள் என்ற கணக்கில் தான் சென்று கொண்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து வேகமாக நகர்ந்து சென்ற ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் வரைக்கும் சென்று ஆஸ்கர் விருதினையும் வென்றதுடன் இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருந்தார்.

மேலும் இவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன போதும் தொடர்ந்து தனது இசையால்  தனக்கென ஒரு ரசிகர்கர் பட்டாளத்தை கொண்டார். சமீபத்தில் கூட இரவின் நிழல், பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு என ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி இருந்த படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.


எனினும் இதனைத் தொடர்ந்து, பத்து தல, பொன்னியின் செல்வன் 2, லால் சலாம், மாமன்னன், கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் புதிய படம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் இசைப்புயல். எனினும் இந் நிலையில்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள்களின் புகைப்படத்துடன் எ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ள கருத்து இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இரண்டு மகள்களும் சேர்ந்து ஒரு சொகுசு கார் வாங்கி இருக்கிறார்கள். அது சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் என ரஹ்மான் தெரிவித்து இருந்தார்.அந்த கார் Porsche நிறுவனத்தின் தயாரிப்பாகும், அதன் விலை சுமார் 2 கோடி ரூபாயை விட அதிகம் என சொல்லப்படுகின்றது.


Advertisement

Advertisement