• Jul 25 2025

"அவருடன் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை " ...பரபரப்பை கிளப்பிய ஆர்யாவின் முன்னாள் காதலி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக  இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்து மக்களை கவர்ந்தவர் .

கஜினிகாந்த் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து 2019 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அத்தோடு இவர் திருமணத்திற்கு முன்பு பெண் தேடும் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளையில் கலந்துகொண்டார். மேலும் இதில் 18 பெண்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் தான் நடிகை அபர்ணதி.

இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் அபர்ணதி பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் ஆர்யாவுடன் சேர்ந்து படத்தில் நடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த அவர், " அவருடன் சேர்ந்து நடிக்க விருப்பமில்லை" என்று தெரிவித்துள்ளார்.அபர்ணதி ஜிவி பிரகாஷுடன் இணைந்து ஜெயில் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement