• Jul 26 2025

சூப்பர் ஸ்டார் மகளுக்கு போட்டியாக... இயக்குநராகும் உலகநாயகன் மகள் ஸ்ருதிஹாசன்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்த வரையில் பல பிரபலங்களின் வாரிசுகளும் நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என ஏதோ ஒரு வழியில் சினிமாவில் காலடி எடுத்து வைத்த வண்ணம் தான் இருக்கின்றனர். அந்தவகையில் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களுமே இயக்குநர் ஆகியுள்ளர்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக கமல்ஹாசன் மகளும் இயக்குநராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்ருதிஹாசன் கூறுகையில், தனக்கு திரைக்கதை எழுதுவதில் மிகவும் விருப்பம் என்றும் அது குறித்த பணியில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும் திரையுலகில் ஒரு புதிய பயணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், திரைக்கதை மட்டுமின்றி கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதில் தனக்கு மிகவும் விருப்பம் என்றும் நேரம் கிடைத்தால் ஒரு திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்டை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அப்பேட்டியில் தெரிவித்தார்.


இதனையடுத்து ஸ்ருதிஹாசன் இயக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு போட்டியாக ஸ்ருதிஹாசன் மாறி விடுவாரா எனவும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement