• Jul 24 2025

பிரதீப் சும்மாவே இருக்கமாட்டார் போல! பயபுள்ள வாயை காெடுத்து வம்புல மாட்டிக்கிறாரே.!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 7ம் சீசனில் இன்றைய எபிசோடில் பிரதீப் கூறிய பல கருத்துக்கள் சர்ச்சையாகி இருக்கிறது.  இவர் அடிக்கடி ஏதாவது ஒன்றை இழுத்துவிட்டு பிரச்சினையில் மாட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.  


இன்று பிக் பாஸ் கடனை திருப்பி அடைக்க வெயிட் டாஸ்க் ஒன்றை கொடுத்தார். அதில் தோற்றுவிட்டால் வீட்டில் இருக்கும் மேக்கப் பொருட்கள் எல்லாம் எடுத்து செல்லப்படும் என அறிவித்தார் பிக் பாஸ். அதற்கு பிரதீப் அப்படி என்றால் நாம் தோற்றுவிடலாம், பெண்கள் மேக்கப் இல்லாமல் அசிங்கமாக இருப்பார்கள், அவர்களால் ஷோவில் ஜெயிக்க முடியாது என  சகாபோட்டியாளர்களிடம்  கூறினார். இதை கேள்விப்பட்ட பெண் போட்டியாளர்கள் பூர்ணிமா உள்ளிட்ட சிலர் பிரச்னையை எழுப்பி இருக்கின்றனர்.


 
இது ஒருபுறமிருக்க பிரதீப் மற்றொரு போட்டியாளரிடம் பேசும்போது "எனக்கு தூக்கம் வரவில்லை. எனக்கு பிக் பாஸ் வீடு பாதுகாப்பாக உணரவில்லை, என்னை சுற்றி சாவடிக்கிற ஆட்கள் தான் இருக்கிறார்கள்" என கூறி இருக்கிறார். பார்க்கலாம் இதற்கு பிக்பாஸ் என்ன பதில் சொல்ல போகின்றார் என்பதை.


Advertisement

Advertisement