• Jul 26 2025

மனம் நொந்து பேட்டி கொடுத்த அசல்-கண்டிப்பா அந்த போட்டியாளருக்கு சாப்பாடு கொடுப்பாராம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களே உள்ளார்கள்.இதில் கலந்து கொண்டு விளையாடியவர் தான் அசல் கோலார்.இவரின் முழுப்பெயர் வசந்தகுமார் பக்தவாச்சலம்.இவர் 1996 இல் பிறந்து உள்ளார்.

ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமான இவர் சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ஏராளமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளார்.

இவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களிடம் தகாத தொடுகை முறையை பயன்படுத்தினார் என்பதற்காகவே.பிக் பாஸ் வீட்டில் இருந்து அசல் வெளியேறிய போது இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை இவர் தவற விட்டு விட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ‘பொதுவாக இந்த இடத்தில் இருந்து வருபவன் எல்லாம் அப்படி தான் இருப்பான் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. வெளியில் நான் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் பிக் பாஸ் வீட்டிலும் இருந்தேன் என்று கூறினார்.

அத்தோடு தொகுப்பாளினி கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார் அசல். நிவாஷினி நீங்கள் வீட்டை விட்டு வெளியேறியதும் ஒரு டாஸ்கில் வின் பண்ணினார்.அதில் அவங்களுக்கு வீட்டில் இருந்து உணவு வரும் எண்டு கொடுக்கப்பட்டது.அதற்கு நிவாஷினி என்னுடைய அக்காவிட்டை கேளுங்க பிக்பாஸ் இல்லாட்டி அசலை தொடர்பு கொண்டு கேளுங்க என்று கூறி இருந்தார்.அதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு...அப்படி சொன்னாங்களா..சரி நாங்கள் வீட்டுக்குள் நிறைய பேசி இருக்கோம்.நான் சென்னையில் தானே இருக்கிறேன் கொண்டு போய்  கொடுக்கிறேன் என்று அழகாக பதிலளித்து இருந்தார்.

Advertisement

Advertisement