• Jul 24 2025

மல்லிப்பூ பாடலை பாடி அசத்திய அனுபாமா பரமேஸ்வரன்- தமிழ்ல செமயா பாடுறாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!


மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் தனுஷிற்கு ஜோடியாக 'கொடி' என்னும் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருந்தது.

தொடர்ந்து தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவிலேயே நடித்து வந்தார். அதன்படி தொடர்ந்து  'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி','ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து தெலுங்கிலும் பிரபலமானார்.கடைசியாக தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம்  வெளியானது.


 தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் பட்டர்பிளை, 18  Pages ஆகிய படங்கள் தெலுங்கில் வெளிவந்தன.

அனுபமா பரமேஸ்வரன் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம்.  சமீபத்தில் போலந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.


இந்நிலையில் அனுபமா ப, வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலை பாடியுள்ள வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "மலையாளத்தில் தமிழ் பேசுவது என்னுடைய புதிய திறமை" என கூறி மல்லிப்பூ பாடலை பாடியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement