• Jul 24 2025

இந்த வாரத் தலைவருக்காக கடுமையாக மோதிக் கொள்ளும் அசீம் மற்றும் அமுதவாணன் வெற்றி பெற்றது இவரா?- முதலாவது ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 75 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. 21 போட்டியாளர்களுடன் கலகலப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில்  10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி  இருந்தனர். 

பின்னர் அதிலும் கடந்த வாரம் தனலட்சுமி எலிமினேட் ஆகிவிட்டதால் 9 பேர் மட்டுமே மீதம் உள்ளனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் அந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் இடம் பெறுகின்றது.

இதில் அமுதவாணன் மற்றும் அசீம் ஆகியோர் போட்டி போடுகின்றனர். அதாவது இருவரையும் ஒன்றாக சேர்த்து ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கும். தனித்தனியாக ஒரு பெரிய பெட்டியும் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே கீழே கிடக்கும் கிப்ட்டுகளை எடுத்து அந்த பெரிய பெட்டியினுள் போட வேண்டும். அதிகமான கிப்ட்டுகளை யார் சேர்க்கின்றாரோ அவரே வெற்றியாளர் என்று கூறப்பட்டதால் ஹவுஸ்மேட்ஸ் ஆர்வமாக விளையாடி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement