• Jul 25 2025

பர்சனல் அட்டாக் செய்யும் அசீம்- டைட்டில் வின்னர் ஆவதற்கு தகுதியே இல்லை- வெளுத்து வாங்கும் ஹவுஸ்மேட்ஸ்!- நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு 90 நாட்களைக் கடந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த நிகழ்ச்சியானது முடிவடையும் என நம்பப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் கமல்சேர் எப்பிஷோட் ஆகும். அந்த வகையில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ண தகுதியில்லாத போட்டியாளராக யாரை நினைக்கிறீங்க என்று கமல்ஹாசன் கேட்டிருந்தார்.அதற்கு டைட்டிலுக்காக இதுவரை விளையாடி வந்த அசீமை அதிகமான போட்டியாளர்கள் சொல்ல ஆரம்பித்ததும் கண்கள் குளமாகும் அளவுக்கு கலங்க ஆரம்பித்து விட்டார் .


அசீம் கோபப்படுகிறார் என்றும் குட் மார்னிங் போல மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் மீண்டும் தப்பு பண்ணுகிறார் என சொன்ன கமல் அவருக்கு அதிகம் பேசும் திறமையும் உண்டு என பாராட்டி விட்டு பிக் பாஸிடமே ஒன்றரை மணி நேரம் பேச முடியுமா என்று கலாய்த்தும் விடுகின்றார்.

இதற்கு முதல் கமல்ஹாசன் பர்சனல் அட்டாக் செய்பவர்கள் யார் யார் என்று கேட்க, ஏடிகே, அசீம் தான் அனைவர் பற்றியும் தொடர்ந்து பேசுகிறார். குறிப்பாக ரச்சித்தாவை பர்சனலாக அட்டாக் பண்ணி பேசியதை நான் பல முறை பார்த்து இருக்கிறேன் என்றார்.


இதையடுத்து பேசிய கமல், நமக்குள் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினால், அதை சரி பண்ண முடியுமானு பாருங்கள். அதை விவாதித்து வெல்வதனால், அந்த தவறைப்பற்றி யோசிப்பதை நிறுத்திவிடுகிறோம் என்றுதான் அர்த்தம் என்று கூறினார்.மேலும் இந்த வாரம் வெளியேறுபவர் யார் என்று கமல் போட்டியாளர்களிடம் கேட்க அனைவரும் மைனாவின் பெயரை கூறுகின்றனர். இதையடுத்து, ஹாட் சீட்டில் இருக்கும் மைனா மற்றும் ரச்சித்தா இருவரும் அங்கிருக்கும் பெட்டியை திறந்து பார்த்தனர்.


அப்போது ரச்சிதாவின் பெயர் அதில் எழுதப்பட்டிருந்ததைத் தொடர்ந்து ரச்சிதா இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்ததைக் காணலாம்.


Advertisement

Advertisement