• Jul 26 2025

லூசு மாதிரி கதைக்காதீங்கனு சொன்ன ஜனனியை வெளுத்துவாங்கிய அசீம்..52ம் நாளில் நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் போட்டியாளர் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ஒரு அணியினர் ஏலியனாகவும், மற்றொரு அணியினர் ஆதிவாசியாகவும் இருக்கின்றனர்.அந்த வகையில் 51ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

இதனைத் தொடர்ந்து அசீம் முதலாவதாக ஏலியன்ஸ் டீமுக்குள்ள போனார்.அவரை எல்லோரும் கோபப்படுத்துவதற்காக பல விடயங்களைக் கூறிக் கொணடிருக்கும் போது அசீம் கோபப்படும் நேரத்தில் ஷிவின் உள்ளே வந்து அதனை குழப்பி விடுகின்றாரர்.

இதன் பின்னர் ஷிவினை தனலக்ஷ்மி வெறுப்பேற்றினார். அதிலும் குறிப்பாக நீயெல்லாம் என்ன கேரக்டர்.. நீ எதுக்காக விளையாட வந்த? இப்படிலாம் விளையாடினால் உன் அம்மாவுக்கு பிடிக்குமா?” என்றெல்லாம் பேசினார்.இருந்தாலும் ஷிவின் இதனை எல்லாம் பொருட்படுத்தாது கேமை சூப்பராக விளையாடி வெற்றி பெற்றார்.


அடுத்ததாக பழங்குடியினர் கிட்ட ஜனனி சென்றார். ஜனனியை அசீம் மோசமாக வைத்து கலாய்த்தார். அதாவது நீ அமுதவாணனை பின் தங்கி தான் இருக்கிறாய். அழுக்கான உடைகளைப் போடுகின்றாய் என நிறைய கலாய்த்தார். இதனால் ஜனனி கோபப்பட்டு தோல்வியடைந்தார்.

இதனை அடுத்து தனலக்ஷ்மி பழங்குடி அணியினரிடம் வந்தார். ஆனால் அவரை அழவைக்கவோ கோபப்படுத்தவோ முடியல. அது போல மணிகண்டனும் பழங்குடியினரிடம் வந்தார். அவரையும் கோபப்படுத்த முடியவில்லை. இது தவிர அசீம் சாப்பாடு ரெடியா என்று கேட்டபோது ஆயிஷாவுக்கும் அசீமுக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது.


தொடர்ந்து ஜனனி தன்னை கொபப்படுத்துவதற்காக ஹவுஸ்மேட்ஸ் சொன்ன வார்த்தைகளைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் அசீமுக்கும் ஜனனிக்கும் இடையில் வாக்குவாதம் அதிகரித்து விட ஏனையவர்கள் வந்து சமாதானம் செய்கின்றனர்.

அதே போல தனது டுமுக்குள்ளேயே அசீம் சண்டை போட்டு வருகின்றார்.இவருக்கு விக்ரமன் புரிய வைக்க எவ்வளவோ சொல்கின்றார். ஆனால் அவர் கேட்பதாக இல்லை என்பதே முக்கியமாகும். இவ்வாறாக சண்டை சச்சரவுகளுடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.


Advertisement

Advertisement