• Jul 26 2025

மீண்டும் வெடித்தது அசீம், விக்ரமன் சண்டை.. கலவர பூமியாக மாறிய பிக்பாஸ் வீடு... வெளியானது பரபரப்பான ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அத்தோடு  கடந்த வாரம் ஜனனி வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் தற்போது வரை மைனா நந்தினி மற்றும் ரச்சிதா ஆகியோருக்கு ஓட்டு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இவர்களில் ஒருவர் வெளியேறலாம் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


அதில் ராங்கிங் டாஸ்க் இடம்பெறுகின்றது. அதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒன்று முதல் பத்து வரை ராங்கிங்  செய்து கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகின்றது. அதில் ஷிவினுக்கும் ஏடிகேவிற்கும் இடையில் பலத்த சண்டை இடம்பெறுகின்றது. அதில் ஏடிகே "உனக்கு எந்த இடத்திற்கும் தகுதி இல்லை, போய்ட்டு பத்தில் இறுதியாக நில்லு" எனக் கூறிக் கத்துகின்றார்.

இதனைத் தொடர்ந்து விக்ரமனுக்கும் அசீமிற்கும் இடையில் பலத்த சண்டை இடம்பெறுகின்றது. அசீம் "ஏன் விக்ரமன் கட்டப் பஞ்சாயத்திற்கு வாறீங்க, அது உங்களுக்கு பழக்கமாகிடிச்சா" எனக் கேட்கின்றார்.  அதுமட்டுமல்லாது அமுதவாணனை பேசியது என் விருப்பம் எனவும் கூறிக் கோபத்தில் கத்துகின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement