• Jul 26 2025

ரச்சிதாவின் முகத்தில் பளார் என்று ஓங்கிக் குத்திய அசீம்... அவங்க மேல அவ்வளவு கோபமா.. வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகச்சியானது வாராவாரம் ரசிகர்களின் எதிரார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணமே அங்குள்ள போட்டியாளர்களும், அவர்களின் குண நடைகளும் தான். அதிலும் குறிப்பாக வார இறுதி எபிசோட்டுகளுக்காக காத்திருப்பவர்களோ ஏராளம்.


அந்தவகையில் இன்றைய தினத்திற்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் "இவர் என் கூட இருந்தால் உள்ளதும் போய்டும் என நீங்க நினைப்பது யாரை" எனக் கேட்கின்றார். அதற்கு ராம், ஜனனி ஆகியோர் எழுந்து தனலட்சுமியைக் கூறுகின்றார்கள்.

அதனைத் தொடர்ந்து எழுந்த ரச்சிதா புகைப்படத்தில் உள்ள அசீமின் முகத்தில் அந்த அடையாளத்தால் பச்சை குத்துகின்றார். 6ஆவது வாரத்தில் இருந்து தன்னுடைய 10சதவீதம் முகத்தைக் காட்டப் போறன் அப்பிடி என்று சொல்லிட்டு இருக்கின்றார் எனவும் கூறுகின்றார்.

அதனையடுத்து எழுந்த அசீம் ரச்சிதாவின் முகத்தில் பளார் என்று ஓங்கி பச்சை குத்துகின்றார். பின்னர் "சிரிச்சுக்கிட்டே ஊசி குத்திற மாதிரி ரச்சிதா இருப்பதாகக் கூறுகின்றார். இதற்கு உடனே கமல் "நிறைய சிறப்பு வாங்கி இருக்கீங்க போல" எனக் கிண்டலாக கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement