• Jul 26 2025

2-ஆவது திருமணம் செய்த ஆஷிஷ் வித்யார்த்தி.. முதல் மனைவி போட்ட சோகமான பதிவு... ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வில்லன், மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பழம்பெரும் நடிகை சகுந்தலா பருவாவின் மகளான ரஜோஷி பருவாவுடன் திருமணம் நடைபெற்றது.


இத்தம்பதியினருக்கு ஆர்த் வித்யார்த்தி எனும் ஒரு மகன் 20வயதில் உள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று திடீரென ஆஷிஷ் வித்யார்த்தி தொழிலதிபர் ரூபாலி பருவா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர் 60வயதில் 2-ஆவது திருமணம் செய்து கொண்டமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில், ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ரஜோஷி வித்யார்த்தி தனது 23 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த சோகத்தில் போட்ட பதிவு ஒன்று ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அதாவது வாழ்க்கையே ஒரு புதிராட்டம் போன்றது தான் என்கிற அர்த்தத்தில், "Do not get PUZZLED in the puzzle called LIFE" என போட்டு சிங்கிளாக இருக்கும் தனது போட்டோவை ஷேர் செய்துள்ளார். 


இதனைப் பார்த்த ரசிகர்கள் "கவலைப்படாதீர்கள், உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்" எனக் கூறி ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement