• Jul 25 2025

பிரமாண்டமாக நடந்த அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் Reception... படையெடுத்து வந்த தமிழ்த் திரையுலகம்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அசோக் செல்வன். இவர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சூது கவ்வும்' படத்தின் மூலம் ஒரு நடிகராக அறிமுகமானவர். இப்படத்தினையடுத்து 'பீட்சா 2 வில்லா', தெகிடி, சவாலே சமாளி, 144, மன்மத லீலை, ஹாஸ்டல், கூட்டத்தில் ஒருவன், ஓ  மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், போன்ற பல படங்களில் நடித்தார்.


இவருக்கும் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய அருண் பாண்டியன் மகளும், இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்தத் திருமணம் இரு வீட்டார் முன்னிலையில் திருநெல்வேலியில் மிகவும் கோலாகலமாக நடந்தது.


இந்நிலையில் இந்த ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி சாந்தனு, ஹரீஷ் கல்யாண், ஆர்யா, வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி, மஞ்சிமா மோகன் என தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளது.


இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement