• Jul 25 2025

வேறொரு பெண்ணுடன் தொடர்பு... கணவனை விவாகரத்து செய்ய முடிவெடுத்த அசின்... வெளியான பரபரப்புத் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் தங்களுடன் இணைந்து நடித்தவர்களையோ அல்லது வேறு யாரையாவதோ காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அவ்வாறு திருமணம் செய்து கொண்ட பலர் சேர்ந்து வாழ்வது கிடையாது. ஆனால் அதையும் தாண்டி ஒரு சிலர் தற்போது வரை கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.


அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அசின். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவ்வாறு பிஸி நடிகையாக இருந்த இவர் 2016-ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் உள்ளார்.


இந்நிலையில் தற்போது அசின் - ராகுல் சர்மா ஜோடிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


அதாவது ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும், அவர் கேட்காத காரணத்தால் தான் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது தற்போது அசின் குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement