• Jul 25 2025

60 வயதில் 2-ஆவது மனைவியுடன் ஹனிமூன் சென்ற பிரபல வில்லன் நடிகர்... புகைப்படங்களை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும், அதனோடு இணைந்து `Ashish Vidyarthi actor vlogs' என்ற யூ ட்யூப் சேனல் ஒன்றையும் நடாத்தி வருகின்றார். இதில் 1.4 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். 


மேலும் தற்போது இவர் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார். அதில் ஒரு சில படங்கள் வெளியாவதற்கு தாயாராக உள்ளன. நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி ஏற்கனவே ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதாவது நடிகை சகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவாவை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 23 வயதுடைய ஆர்த் வித்யார்த்தி என்ற ஒரு மகனும் உள்ளார். 


இருப்பினும் இவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக, இருவருமே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தி்ன் கவுஹாத்தியை சேர்ந்த தொழில் முனைவோரான ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். 50 வயதான இவர் கொல்கத்தாவில் உள்ள 'NAMEG' என்ற ஹேன்ட் மேட் பேஷன் டிசைனிங் கடையை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஷிஷ் வித்யார்த்தி தனது இரண்டாவது மனைவி உடன் ஹனிமூன் சென்றபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருவதோடு "பல்லுப்போன வயதில் பகோடா கேட்குதா" என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement