• Jul 24 2025

ஆடிஷன்லயே ஆடையை இழுக்கச் சொன்னார்.அப்போது தான் அவருக்கு வேறு நோக்கங்கள் இருப்பதை அறிந்துகொண்டேன் - சீரியல் பிரபல நடிகை பேட்டி

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபல்யமான   நடிகை அர்ச்சனா மாரியப்பன். அவர் வில்லியாக பல தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும் பல திரைப்படங்களிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார். அந்தவகையில் இவர் வாணி ராணி, அழகு, வள்ளி, அழகி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், போகி, முத்தின கத்திரிக்காய், நாடோடிகள், வெள்ளக்கார துரை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


சீரியலிலும் சரி திரைப்படங்களிலும்  சரி அவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களை  ஈர்த்து இருக்கின்றன. இந்நிலையில் தற்போது அர்ச்சனா மாரியப்பன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் தன்னிடம் ஒரு பிரபல இயக்குனர் தவறாக நடந்ததாக கூறி இருக்கிறார்.

அன்று நான் சல்வார் அணிந்திருந்தேன். அப்போது டைரக்டர் என்னிடம், 'உன் பேன்ட்டை முழங்கால் வரை இழு' என்றார். ஏன் சார் என நான் கேட்டேன். செவிலியர் வேடத்தில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார். சரி என்று சொல்லி, கால்சட்டையை முழங்கால் வரை தூக்கினேன்.


அவ்வளவு தூக்கியதும் கொஞ்சம் மேலே தூக்கச் சொன்னார். அப்போது தான் அவருக்கு வேறு நோக்கங்கள் இருப்பதை உணர்ந்தேன். அவர் பெரிய இயக்குநர் என்பதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. நானும் நாளை வந்து காஸ்ட்யூம் போட்டுக் கொள்கிறேன் என்று அந்த அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்தேன்" என்று கூறியுள்ளார்..

Advertisement

Advertisement