• Jul 23 2025

மூன்று நாள் முடிவில் உலகளவில் jawan திரைப்படம் பெற்ற வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் முதன்முறையாக பாலிவுட் சென்றுள்ள அட்லீ, முதல் சம்பவத்தையே தரமாக செய்துள்ளார். பாலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் எதிர்பார்க்க வைத்தது ஜவான். அதன்படி, செப்டம்பர் 7ம் தேதி வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் ஷாருக்கானுடன் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையும் இந்தப் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. முன்னதாக ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி 1200 கோடிக்கும் மேல் வசூலித்தது. 


இதனால், ஜவான் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியான ஜவான் முதல் நாளில் மட்டுமே 130 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனையடுத்து இரண்டாவது நாளில் 110 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். தற்பொழுது மூன்றாம் நாள் முடிவில்  இதுவரை உலகளவில் ரூ. 375 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement