• Jul 24 2025

தேனிசைத் தென்றல் தேவா செய்த சாதனைகள்... அடேங்கப்பா ஒண்ணா ரெண்டா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தனது இசையால் வசியம் செய்த ஒருவர் என்றால் அது தேவா தான். அதாவது 'மாட்டுக்கார மன்னாரு' படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவநேசன் சொக்கலிங்கம்.


அறிமுகப்படத்திலேயே பலரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றமையால் தொடர்ந்தும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த தேவா கானா மற்றும் மெலோடி இரண்டிலும் மற்ற இசைமைப்பாளர்களை விட கொடிகட்டி பறந்தார்.

இவரது சினிமாப் பயணத்தில் ஆரம்பத்தில் தேவா என்று அழைக்கப்பட்டு வந்த இவர், காலப்போக்கில் தனது இசையால் ரசிகர்கள் அனைவராலும் 'தேனிசை தென்றல் தேவா' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.


அதிலும் குறிப்பாக கானா பாடலுக்கு பேர்போன பிரபல இசையமைப்பாளர் என்றால் அனைவருக்கும் உடனடியாக நியாபகம் வருவது தேவா அவர்களின் முகம் தான்.

இந்நிலையில் இன்றைய தினம் இவர் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதனால் இவர் செய்த சாதனைகள் குறித்த விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது 90ஸ் காலகட்டத்தில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இசையமைப்பாளர் தேவா அந்த  9 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது பற்றிய விபரமே அது.


இதோ அந்த சாதனையின் உடைய விபரப் பட்டியல் 

1991ஆம் ஆண்டு - 16 படங்கள்

1992ஆம் ஆண்டு - 25 படங்கள்

1993ஆம் ஆண்டு - 22 படங்கள்

1994ஆம் ஆண்டு - 29 படங்கள்

1995ஆம் ஆண்டு - 28 படங்கள்

1996ஆம் ஆண்டு - 26 படங்கள்

1997ஆம் ஆண்டு - 34 படங்கள்

1998ஆம் ஆண்டு - 21 படங்கள்

1999ஆம் ஆண்டு - 26 படங்கள்

இவ்வாறாக பல படங்களுக்கும் இசையமைத்து இன்றும் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்து வருகின்றார். இன்றும் அவரது பாடல்களை நம் யாராலும் மறக்க முடியாது.

Advertisement

Advertisement