• Jul 25 2025

கண்ணை நம்பாதே படத்தை பார்க்க முக்கியமான நபரை திரையரங்கிற்கு அழைத்து வந்த ஆத்மிகா- நெகிழ்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இந்நிலையில், நடிகை ஆத்மிகா 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தை தனது தாத்தாவுடன் பார்த்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், அதில், "மகிழ்ச்சி என்பது உங்கள் தாத்தாவின் முகத்தில் பெருமிதம் பிரகாசிப்பதை பார்ப்பது. 90 வயதிற்கு மேற்பட்டவர் அவரது பேத்தி படத்தைப் பார்க்க சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறினார். விலைமதிப்பற்ற இந்த தருணங்கள் என்றென்றும் பொக்கிஷமாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement