• Jul 23 2025

ஏடிகே தான் டைட்டில் வின் பண்ணுவாரு- பிக்பாஸ் வீட்டில் கணித்து சொன்ன பிரபலம்-இது எப்போ?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸில் நடந்த  Ticket To Finale டாஸ்க்கில் அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.அத்தோடு இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

பிக் பாஸ்  இந்த சீசனுக்கான கடைசி நாமினேஷன் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இதில் "Nominated" என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒன்று இருக்க, அதனை தாங்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர் முகத்தில் ஒட்டி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலரும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தனர். 


பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர்.முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் Guest வருகிறார்கள் என போட்டியாளர்கள் குதூகலாமாகி இருந்த நிலையில், அவர்கள் வந்து பலரின் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என அனைத்து விஷயங்களையும் கூறியதால், ஏன் அவர்கள் வருகை தந்தார்கள் என்பது போல போட்டியாளர்கள் கதி கலங்கியும் போயிருந்தனர்.

இதற்கு மத்தியில், பிக் பாஸ் Finale நெருங்கி வருவதால் எந்த போட்டியாளர்கள் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார்கள் என்பது பற்றியும் தற்போதில் இருந்தே நிறைய பேர் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில், டைட்டில் ஜெயிக்க வாய்ப்புள்ள போட்டியாளர் குறித்து மைனா நந்தினி பேசியுள்ள விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அமுதவாணன், மைனா நந்தினி உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் மைனா நந்தினி, "ஏடிகே மாமாவும் டைட்டில் வின் பண்ண வாய்ப்பு இருக்கு" என தனது கணிப்பை குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement