• Jul 25 2025

முன்பதிவிலேயே அவதார் 2 பிரம்மாண்ட சாதனை- இத்தனை கோடியா தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய "அவதார் தி வேவ் ஆஃப் வாட்டர்" படம் இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான படங்களை விட மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது.

தி வே ஆஃப் வாட்டர் இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் டிசம்பர் 16 முதல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

மேலும் இப்படம் இந்தியாவில் அதிவேக முன்பதிவு கண்டுள்ளது. 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று இந்திய பாக்ஸ் ஆபி தெரிவித்துள்ளது.

சீனாவின் திரையரங்குகளில் வெறும் 35 சதவீதம் மட்டுமே முழுமையாக திறந்திருந்தன.


 எனினும் சமீபத்திய தளர்வுக்கு பிறகு, நிறைய திரையரங்குகளில் முழு திறனுடன் வெளியாகுமென அறிவித்துள்ளனர். அவதார் 2 வெளியாக சில வாரங்கள் இருக்கும் நிலையில் இதுவரை சீனாவில் ரசிகர்கள் மொத்தம் 1 கோடி டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர்.

அவதார் - 2 திரைப்படம் வரலாற்றில் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

Advertisement

Advertisement