• Jul 26 2025

உடம்பு சரி இல்லை என்றால் உள்ள வச்சு எதற்கு சோறு போடணும் ஆயிஷா ரொம்ப நடிக்காதம்மா- குற்றம் சாட்டிய பிக்பாஸ் பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரை 6வரை வந்துள்ளது. எனவே பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்ட மோகன் வைத்தியா பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது இந்த சீசனில் விளையாடும் போட்டியாளர்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் பிக்பாஸ்ல ஆயிஷா தான் நடிக்கிற மாதிரி இருக்கு. உடம்பு சரி இல்லை என்று படுக்கிறா ஆனால் டாஸ்க் ஆரம்பிச்சா ஓடி வந்து விளையாடுறா இது பார்க்கவே தெரியுது.


அதே மாதிரி ஆயிஷா வந்ததற்கும் தற்பொழுது இருக்கும் நிலைமைக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது. உடல் மெலிஞ்சு மனசில ஏதோ கவலை இருக்கிற மாதிரி தெரியுது. சரி நான் ஒன்று கேட்கிறேன்.உடம்பு சரி இல்லை என்று சொல்லுறவங்களை எதுக்கு வீட்டுக்குள்ள வச்சு சாப்பாமு போடணும் அவங்களை வெளில அனுப்பிடலாமே.


ஆயிஷா இப்படி சொல்லி தன்னை வீட்டுக்குள்ள மக்கள் வச்சிருக்கணும் என்று ஆசைப்படுகின்றாள். அதனால சொல்லுறேன் ஆயிஷா ரொம்ப நடிக்காதம்மா ஒழுங்கா விளையாடிட்டுவாம்மா என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement