• Jul 25 2025

அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இடம்பிடித்த ஆயிஷா..கடைசியில் எவ்வளவு வாங்கினார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கேரளாவில் பிறந்து வளர்ந்து பின் மாடலாக தன்னை அடையாளப்படுத்தி தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆயிஷா.

மேலும்  இவர் ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்துவந்தார். அந்த தொடர் நடிகைக்கு மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது.

அதில் அவருடன் நடித்த விஷ்ணுவை ஆயிஷா காதலிக்கிறார் என்றெல்லாம் நிறைய வதந்திகள் பரவின.


தற்போது சத்யா 2 சீரியலுக்காக தனது லுக்கை எல்லாம் மாற்றி நடித்தார், தொடர் முடிவுக்கு வர அப்படியே பிக்பாஸ் 6வது சீசன் நுழைந்தார்.

இவ்வாறுஇருக்கையில் 50 நாட்களை தாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த ஆயிஷா நேற்றைய தினம் வெளியேறிவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் ஆயிஷாவும் ஒருவர். ஒரு நாளைக்கு இவருக்கு ரூ. 28 முதல் ரூ. 30 ஆயிரம் வரை பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.


Advertisement

Advertisement