• Jul 25 2025

என்ன கெட்ட வார்த்தை பேச வச்சிராத..ஷிவினிடம் கடும் கோபத்தில் இருக்கும் ஆயிஷா- கதிரவன் தான் கரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் குயின்சி வெளியேறியிருந்தார்.இந்த நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஐகானிக் கேரக்டர்களை ஏற்று அந்த கேரக்டர் போலவே நடை உடை பாவனை ஒப்பனை உள்ளிட்டவற்றை ஏற்று டாஸ்க் செய்து வருகின்றனர். இதில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ஷிவின் நடிக்க,பலாத்காரம் செய்யும் ஆணாக கதிரவனை நடிக்க வைக்கலாம் என்று ஆயிஷா கூறுகிறார்.  ஆனால் ஷிவினோ, கதிரவனுக்கு ஒரு கரியர் இருக்கிறது, அவருக்கு இது நெகட்டிவாக அமையலாம் என்று மறுக்கிறார்.


அப்போது இது வெறும் நாடகம் தானே என்று ஷிவினை ஆயிஷா சமாதானப்படுத்த முனைகிறார்.ஆனால் ஷிவின் மீண்டும் மீண்டும் மறுக்க, அப்போது ஆயிஷா, “இங்க பார். நான் சரளமாக கெட்ட வார்த்தை பேசுவேன். என்னை கெட்ட வார்த்தை பேச வச்சிராத. இது வெறும் நாடகம் தான். நான் சொல்வதைக் கேள். அவரும் மீடியாவில் தான் இருந்திருக்கிறார். அவருக்கும் இதெல்லாம் புரியாமல் இல்லை.” என்று சமாதானப்படுத்துகிறார்.

இதனிடையே அங்கு ஏடிகே வர ஷிவின் பேச்சை நிறுத்திக் கொள்கிறார். ஆனால் ஆயிஷாவோ, “கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கேமரா வழியே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு யாரும் பார்க்கவில்லை” என்று ஜாலியாக கிண்டல் அடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement