• Jul 25 2025

திடீரென குரலை உயர்த்திப் பேசிய ஆயிஷா- தொடர்ந்து முட்டி மோதிக் கொள்ளும் மகேஷ்வரி மற்றும் அசீம்- 30ம் நாளில் நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருகக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு 30 நாட்களைக் கடந்துள்ளது. அந்த வகையில் 30ம் நாள் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

ஹவுஸ்மேட்டிற்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகின்றது. இதனால் இவர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து சுஃவிட்ஸ் கடையை ஆரம்பிக்க வேண்டும். அதில் பிக்பாஸ் கொடுக்கின்ற பொருட்களை வைத்து சுஃவிட்ஸ் செய்த அனுப்ப வேண்டும்.இதனால் அமுதவாணன்தலமையில் ஒரு டீமும் விக்ரமன் தலைமையில் ஒரு டீமும் உருவானது.இதனைத் தொடர்ந்து டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி முதலாவதாக நடந்த டாஸ்கில் அமுதவாணன் டீம் வெற்றி பெற்றது.


இந்த டாஸ்க்கில் முதலாவதாக ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் தீர்ப்பு வழங்கியிருந்தனர். தொடர்ந்து வர்கள் வழங்கிய தீர்ப்பு அமுதவாணன் டீமுக்கு சாதகமாக இருப்பதாக ஏடிகே மற்றும் அசீம் ஆகியோர் ஆயிஷாவுடன் மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதன் பின்னர் அடுத்த டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டது.

அதிலும் இரண்டு அணியும் புதிய சுஃவிட்ஸ் செய்தனர். இதனை குயின்சி மற்றும் மணிகண்டன் ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.இந்த முறையும் அமுதவாணன் டீம் தான் வெற்றி பெற்றது. மேலும் விக்ரமன் டீமுக்குள் இருந்த மகேஷ்வரி மற்றும் அசீமுக்கிடையில் மோதல் டாஸ்க் ஆரம்பித்த டைம்ல இருந்து நடைபெற்றது.


அதன் பின்னர் ஹவுஸ்மேட்ஸ் தமது டீமுக்கு தேவையானவர்களை மாற்றி எடுத்துக் கொண்டனர். அதன்படி விக்ரமன் டீம் அசீமுக்கு பதிலாக மணிகண்டனையும் கதிரவனுக்கு பதிலாக மைனா நந்தினியையும் தேர்ந்து எடுத்தனர். அதே போல அமுதவாணன் டீம் ஜனனிக்கு பதிலாக ராமைத் தேர்ந்தெடுத்தனர்.

இதன் பின்னர் ஏடிகே மற்றும் கதிரவனுக்கும் பிக்பாஸ் ஒரு டாஸ்க்கினைக் கொடுத்தார். இதில் இரண்டு பேருமே தோல்வியடைந்ததால் ஏடிகேவுக்கு பெரிய காதும் கதிரவனுக்கு விஃக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த பசர் அஎக்கும் வரை அணிந்திருக்க வேண்டும் என்று கூறியதால் இருவரும் அணிந்து கொண்டனர். இதனை ஏனைய பேபாட்டியாளர்கள் கேலி செய்து கொண்டிருந்தனர்.இவ்வாறாக இந்த எப்பிஷோட் முடிவடைந்து.


Advertisement

Advertisement