• Jul 26 2025

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது ஆயிஷா தானாம்- யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதால் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும், ராஜகுருவாக விக்ரமனும், படைத்தளபதியாக அசீமும், பாதுகாவலர்களின் தலைவனாக ஏடிகேவும் இருந்து வருகின்றனர்.

இந்த டாஸ்க் ஆரம்பித்த போது ரச்சிதாவுக்கும் அசீமுக்கும் ஒரு ரகசிய டாஸ்க் கொடுக்கப்பட்டது.அவர்கள் அந்த டாஸ்கினை கதிரனை வைத்து செய்த வருகின்றனர்.கதிரவனும் வழமையை விட இந்த டாஸ்க்கினை சிறப்பாக மேற் கொண்டு வருகின்றார்.


இது ஒரு புறம் இருக்க அசீம் விக்ரமனுடன் முதலில் மோதலில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஏடிகே தனது வேலையைச் செய்யல என்றும் தன்னைப் பற்றி முதுகிற்கு பின்னால் பேசி வருவதாகவும் சண்டை பிடித்தார். ஒரு கட்டத்தில் ஏடிகே அசீமை கெட்ட வார்த்தையால் திட்டினார்.

இந்த நிலையில் இந்த வாரம் யார் வீட்டை விட்ட வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. அதன்படி குறைவான வாக்குகளை பெற்ற நிவாஷினி தான் வெளியேறுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்பொழுது ஆயிஷா தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement