• Jul 25 2025

சீமானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அசீம்! குழப்பத்தில் ரசிகர்கள்..

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில், உலக நாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இதுவரை, ஒளிபரப்பான ஐந்து சீசன்களையும் தூக்கி சாப்பிட்டது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி எனலாம். ஆரம்பமான ஒரு வாரம் மட்டுமே குறைவான சண்டைகளுடன் நகர்ந்த நிகழ்ச்சி, முடிவை எட்ட சில நாட்கள் இருக்கும் வரை பரபரப்பாக போட்டியாளர்கள் கத்திக் கொண்டே இருந்தனர்.

அப்போது சீமானுக்கு முத்தமிட்டு எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான்  அயலானே! கொள்கை, கோட்பாடு, தத்துவத்தை எல்லாம் தாண்டிய உறவிது என்றும்... அண்ணன் சீமானின் அன்பு தம்பி தான் நான்.. என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாகி வருவது ஒரு பக்கம் இருந்தாலும், சில ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.  காரணம் பல இடத்தில் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, பெயரில் பயன்படுத்தி வரும் அசீம் திடீரென திமுகவை கடுமையாக விமர்சிக்கும் சீமானின் பக்கம் தாவியதுதான்? இதற்ககு என்ன பதில் கூறுவார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் சீசன் 6 டைட்டில்,  50 லட்சம் ரூபாய் பரிசு, கார் ஆகியவற்றை வென்ற அசீம் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.  

பல ஊடகங்களுக்கு பிஸியாக பேட்டி கொடுத்து வருவது மட்டுமின்றி, சில அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் கட்சியை சேர்ந்த சீமானுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அசீம் பங்கேற்றுள்ளார்.

இதுவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மீது சிலருக்கு வெறுப்புணர்வை தூண்ட காரணமாகவும் இருந்தது. எனினும் இந்த நிகழ்ச்சியில், கடைசிவரை தன்னை விமர்சித்தவர்களை பொறுமையாக கையாண்ட விக்ரமன் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு, சற்றே திமிராக நடந்து கொண்ட அசீம் வெற்றியாளராக வாகை சூடினார். 

இது பலரையும் வியப்படையச் செய்தாலும், அசிமுக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்ததே இவரின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.


Advertisement

Advertisement